The Vice-President of India, Shri C. P. Radhakrishnan, has voiced deep grief at the passing of well-known music composer Deva. In his condolence message, the Vice-President observed that Deva had built a distinct identity in the Tamil film industry with his unique musical style and popular ‘gaana’ songs, which reflected the lives and emotions of ordinary people. He recalled that Deva had scored music for more than 400 films in Tamil, Telugu, Malayalam and Kannada, leaving a lasting mark on Indian cinema. According to the Vice-President, Deva’s memorable compositions and his distinctive contribution to 'gaana' music will be cherished by generations of music lovers. He called the composer’s passing a great loss to the Tamil film and music industry. Shri C. P. Radhakrishnan conveyed his heartfelt condolences to the grieving family, relatives, friends, members of the film fraternity and music lovers.
இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் திரு. தேவா அவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
